
திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, நான் சொல்வதனால் தப்பா எடுத்துக்க வேண்டாம்… திரிச்சி போடவேண்டாம்… அண்ணாவின் மறைவு குறித்து ஒரு பெரிய ஆன்மீகவாதி நெய்வேலியில் அண்ணா அவர்களுக்கு வைத்தியம் பார்க்க அமெரிக்காவிலிருந்து மில்லர்ன்னு ஒரு டாக்டர் வந்தாரு. அப்படி வந்து வைத்தியம் பார்த்து அண்ணா மறைஞ்சுட்டாரு…. மில்லரு வந்தால் என்ன ? யார் வந்தால் என்ன ? என கிண்டலாக பேசிய ஒருவர்…. அவருக்கென்று ஒரு தனி கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு….
அண்ணாவின் உடைய மறைவு குறித்து பேசினார் என்ற உடனே அதே நினைவஞ்சலி கூட்டத்தில் அவரை ஓட ஓட அடிச்சு விரட்டினார்கள். அன்றைக்கு இருக்கின்ற திக, திமுக தொண்டர்கள். அன்னைக்கு அடிச்சது விரட்டுனது நான் சொல்லல… அடிக்கிற அளவுக்கு இவங்க பெரிய மனுஷங்க இல்ல… அது வேறு விஷயம்… ஆனால் இரண்டு நாளாக ஒருத்தன் பேசிட்டு ஊர்வலமா போயிட்டு இருக்கான் இந்த தமிழ்நாட்டுல….
பெரியாரை பேசிட்டு… பெரியாரின் உடைய அண்ணாவை பேசிவிட்டு…. எங்கே நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்… மிக வேதனையோடு நான் சொல்கின்றேன்… இந்த இனத்தை அழிப்பதற்கு ஒரு கூட்டம் புறப்பட்டு வந்து விட்டது. அதற்கு இலக்கிய அணி மூலமாக தான் நம்முடைய வரலாறு….. இலக்கியம்… நம்முடைய அண்ணா, கலைஞர், பெரியார் இவர்களின் உடைய எழுத்துக்களையெல்லாம் இலக்கிய அணியின் சார்பாக பிரச்சாரம் செய்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.