
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், NDA கூட்டணியின் நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் எப்படி முடிவெடுத்தீர்கள். பிஜேபி என்ன முடிவெடுக்குமோ, அதன் பிறகு நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் இருப்போம் என்று பிஜேபி அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ளவில்லை.
பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார் ஓபிஎஸ். எங்களை பொருத்தவரை நாங்கள் சொல்கின்றோம். அகில இந்திய அளவில் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது இல்லை என்று சொல்ல முடியாது. நாங்க கூட்டணியில் இருக்கோமா ? இல்லையா ? என்பதே இன்னும் முடிவாகவில்லை. தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக… முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று எந்த மனநோயால் சொன்னார்களோ, அதே நோய் தான் இன்றைக்கு இந்த பிளவுக்கு காரணமே தவிர, வேறு ஏதும் இல்லை.
எங்களையும், டிடிவி தினகரனையும் NDA கூட்டணியில் வைக்க வேண்டும் என்ற கண்டிஷன் என சொல்வதை ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை எல்லாம் நம்பாதீர்கள். எங்களைப் பொருத்தவரையில் இன்றைக்கு நாங்கள் நம்புகிறோம். கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். நிர்வாகிகள் தான் பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் காலத்திலேயே அவரோடு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் வந்தார்.
அதேபோல ஜானகி – ஜெயலலிதா அணி பிளவு ஏற்பட்ட போது, எல்லா சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் எல்லாம் ஜானகி அணி பக்கம் தான் இருந்தார்கள். என்ன ஆச்சு ? மக்கள் அடுத்த தேர்தலில் எது உண்மையான கட்சி என்பதை நிரூபித்தார்கள். 2024 இல் நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் அது உண்மை. அவரை புடிக்கின்றதா ? இல்லையா என்பது வேறு…
நாம் ஒத்துக்கிறோமா, இல்லையா என்பது வேறு. கடவுளையோ குறை சொல்லக்கூடிய நாடு. ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு போனார். லல்லு பிரசாத் யாதவ் பீகாரிலே போனார். அதெல்லாம் நடந்திருக்கிறது. நீங்க எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்… உள்நோக்கத்தோடு எடுத்துக் கொள்கிறீர்களா ? உண்மை அப்படியே நிற்கும். அது நீங்க ஒத்துக்கணும். நான் ஒத்துக்கணும் என்ற அவசியம் இல்லை. அம்மா வழக்கில் ஊழல் தீர்ப்பு சரியான சூழ்நிலையில் வழங்கவில்லை என்பது எங்களுடைய கருத்து தெரிவித்தார்.