தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பிரதர், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கும் நிலையில் ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அதன்பிறகு பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் தற்போது டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள பிரதர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.