
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் சுருக்கு முறை திருத்தம், மாநில தேர்தல் ஆணையத்தின் உடைய அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதிலும் வாக்காளர் சுருக்கு முறை திருத்தம்…. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள்…. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான புகைப்படம்…. என்னுடைய போட்டோ இருக்க வேண்டிய இடத்தில் வேற ஒரு போட்டோ இருக்கும் அந்த குளறுபடி….
அதேபோல் இடமாற்றம்… அதே போல இறந்தவர்கள்…. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி, ஜனவரி மாதம் வெளியிடுகின்ற வாக்காளர் பட்டியல் என்பது ஒரு முழுமையான அளவிற்கு…. குறை இல்லாத ஒரு வாக்காளர் பட்டியலாக இருக்க வேண்டும் என்கின்ற வகையிலே…. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம்…
ஒவ்வொரு முறையும் நீங்கள் கூட்டம் கூட்டுகிறீர்கள்…. கூட்டம் கூட்டி இறந்தவர்களை நீக்குங்க என்றால் நீக்குறது இல்ல….. எலக்ஷனில் தான் இறந்தவர்கள் உயிரோடு வருகிறார்கள்… எலக்சன் நேரத்தில் அவங்களை நீக்குவது கிடையாது…. இறந்தவர்கள் கூட உயிரோடு வருகிறார்கள் என்றால், அது எலக்சன் டைம்ல தான்…. அது மட்டும் அல்லாமல் வாக்காளர்களின் புகைப்படம் மாறி இருக்கு… அதையும் ஒவ்வொரு முறையும் சொல்றோம்….. ஆனால் சரி பண்றது இல்ல….
தொகுதிக்குள்ளையே இடம் மாறுவார்கள் அல்லது தொகுதியை விட்டும் இடம் மாறுவங்க…. அந்த மாதிரி இரண்டு ஓட்டுகள் இருக்கும் இடங்களில் ஒரு ஓட்டு தான் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தவித குறைபாடும் இல்லாமல்… 100% வாக்காளர் பட்டியல், சரியான வகையில் வாக்காளர் பட்டியல் இருக்கனும்… வாக்களிக்கின்ற உரிமை எல்லோருக்கும் உண்டு. அது ஜனநாயக கடமை.
அந்த ஜனநாயக கடமையை ஆற்றுகின்ற வகையில் தேர்தல் ஆணையம் 100% உறுதியளிக்கணும். தேர்தல் ஆணையமும் சொன்னாங்க…. கண்டிப்பாக அந்த பிரச்சனை வராது என்று சொல்லி எங்களுக்கு உறுதி கொடுத்தாங்க… ஆனால் இப்ப என்னன்னா…. தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் ஆன்லைன் மூலமாக…. கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்ற வகையில் கேம்ப் நடத்தணும் என பேசினார்.