
இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதோட நல்ல லாபத்தையும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் நிம்மதியாகவும், எதிர்கால வாழ்விற்காகவும் வயதான பின்பு யாருடைய உதவி எதிர்பார்க்காமல் இருப்பதற்கு சேமிக்கும் பழக்கம் முக்கியமான ஒன்று. வங்கிகள், தபால் அலுவலகம். எல்ஐசி நிறுவனங்கள் சேமிப்புகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்த வகையில் 50 ரூபாய் முதலீட்டில் போஸ்ட் ஆபீஸின் ரெக்கரிங்க் திட்டத்தில் நல்ல லாபம் பெறுவது குறித்து பார்க்கலாம்.
ரெக்கரிங் திட்டத்தில் தினமும் 50 ரூபாய் வீதம் மாதம்தோறும் 1500 ரூபாயை கணக்கில் தொடர்ந்து செலுத்தி வரவேண்டும். தொடர்ந்து ஐந்து வருடங்கள் இப்படியே டெபாசிட் செய்யும்பொழுது ஐந்து ஆண்டுகளில் முதலீடு 90 ஆயிரம் கிடைக்கும். வட்டியாக மட்டும் 1,750 கிடைக்கும். இதன் மூலமாக மெச்சூரிட்டி தொகை ஒரு லட்சம் ரூபாயை முதலீட்டாளர் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 100 ரூபாய் என அதிகரிக்கும் போது லாபமும் பெருகும் .
அதாவது தினமும் நூறு ரூபாய் வீதம் மாதம் 3000 ரூபாய் என்ற கணக்கில் செலுத்தும்போது 5 வருடத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும். இதற்கு வட்டியாக மட்டும் 32,972 ரூபாய் கிடைக்கும். இதன் மூலமாக கடைசியில்2 லட்சத்து 12 ஆயிரத்து 922 ஆயிரம் ரூபாய் கிடைக்கும. இந்தத் திட்டத்தில் 6.7 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. 12 தவணை செலுத்திய பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து 50 சதவீதம் வரை கடனாக கிடைக்கும். 5 வருடங்களுக்கு பின் மேலும் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம்.