
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார் 3,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான நேர்காணல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று கோவில் அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளது.