
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் புள்ளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்த திருவேங்கடத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் திருவேங்கடம் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.