
இந்தியாவின் முதல் Reusable ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா 4 குழுமத்துடன் இணைந்து மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிஷன் ரூமி 2024 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் பெயர் RHUMI 1. இது இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைபிரிட் ராக்கெட்டாகும்.
இதனை சோதனை செயற்கைக்கோள்களுடன் மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரையில் இருந்து விண்ணில் ஏவினர். இந்த ராக்கெட் 3.50 மீட்டர் உயரம் இருக்கும் நிலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வானில் பறக்கக்கூடியது. மேலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால் ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பலமுறை செயற்கைக்கோள்களை ஏவலாம். மேலும் இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இதன் நோக்கம்.