தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது. இன்றும் அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.