
சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தற்போது ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
அதாவது ரூ.1 லட்சம் உத்தரவாத தொகையுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழங்கிலும் ஜாபர் சாதிக் கைதாகியுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.