தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனமழை எதிரொலியாக தற்போது கோவை மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே புதுச்சேரியில் மாகே பிராந்தியத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.