தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமார். இவர் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியம் இன்று காலை உயிரிழந்தது நடிகர் அஜித் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது..