சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி பெங்களூரில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி அன்று கேரளாவில் உள்ள எம்.கே.ஃபைசி-யின் வீட்டில் நிதி குற்ற புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.

அதில் ED மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு நாடு தழுவிய அடக்குமுறைக்குப் பிறகு பி எஃப் ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை உள்துறை அமைச்சகம் கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடை செய்தது. இந்த அமைப்பு தீவிரமயமாக்கலை தூண்டுவதாகவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.