பொதுவாக விரதம் இருக்கும்போது படையல் உணவுகளை வழங்குவதற்காக காகங்களை அழைப்பதை பார்த்திருப்போம். காகம் கரைவது போல் அழைக்காமல் “கா கா” என கூப்பிட்டு உணவு வழங்குவோம். இந்நிலையில் வாலிபர் ஒருவர் அவரது பாணியில் காகங்களை அழைக்கிறார்.

இவரது குரல் கேட்டு வெறும் நீலமாக காட்சியளித்த வானம் சில நொடிகளில் காகங்களால் நிரம்பி விட்டது. அந்த வாலிபரின் அழைப்புக்கு பின் காகங்களால் நிரம்பிய நீல வானம் பார்ப்பவர்களுக்கு கண்கவர் காட்சியாக இருந்தது. இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “இந்தியாவின் காக்கை நாயகன்” என தலைப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.