ஆந்திர மாநிலம் ஏலூரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் 28 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கொடூர சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது. விடுதி நிர்வாகி சசிகுமார், தனது 2வது மனைவி மற்றும் மருமகளுடன் சேர்ந்து இந்த பயங்கர செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. சசிகுமார், மாணவிகளை புகைப்படம் எடுக்கச் செல்வதாக கூறி தனியார் இடத்திற்கு அழைத்து சென்று, அவர்களின் கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்ததாக அறியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் பல மாதங்களாக பயத்தில் இருந்து வெளியே புகார் அளிக்கவில்லை. சசிகுமாரின் மிரட்டலால் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், 3 சிறுமிகள் திடீரென தங்கள் துயரத்தை வெளியிட, இது தொடர்பாக ஏலூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீசார், விடுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் மேலும் விவரங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கின்றனர். இந்த கொடூர நிகழ்வில் தொடர்புடைய சசிகுமார், அவரது 2வது மனைவி மற்றும் மருமகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.