ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் மாணவி வழிமறித்து புதருக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.

மாணவியை புதர்க்குள் வைத்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். அதன் பின் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.