உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் சென்ற ஆண்டு நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டொனால்ட் ட்ரம்ப் இடம் தோல்வியுற்றார். கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அமெரிக்க செனட்டர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாரிஸ் கலந்து கொண்டார். இந்த நிலையில் குடியரசு கட்சியின் டெக் பிஷ்ஷர் மற்றும் அவரது கணவர் பிஷ்ஷர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பிஷ்ஷர் தனது ஒரு கையில் கைத்தடியும், மறு கையில் பைபிளையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பதவியேற்பு விழா முடிந்த உடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் டெப் பிஷ்ஷர்க்கு கை கொடுத்தார். அதன் பின் அவரது கணவர் பிஷ்ஷர்க்கு கைகுலுக்க கமலா ஹாரிஸ் கையை நீட்டினார். ஆனால் பிஷ்ஷர் கைகுலுக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.