
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், 2024இல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக இது. ஜனநாயக புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, இணைய விரும்பும் கூட்டணியை சிறப்பாக அமைத்து, நாங்கள் போட்டியிடுவோம். ஆதரவு தெரிவிக்கிறது எல்லாம் இல்ல, திட்டங்களை வகுத்து, சரியா காய் நகர்த்தி…. எங்களுக்கு கப்பு தான் முக்கியம். இப்போ உதாரணத்துக்கு முல்லைக்கொடி படரனும்னா எட்டி மரமா இருந்தாலும் பரவால்ல, புட்டி மரமா இருந்தாலும் பரவால்ல…
எங்களுக்கு குறைந்தபட்சம் நாங்க பேசி முடிவெடுத்து இருக்கிற வகையில் பத்து பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம். விஜய் கட்சி தொடங்கினால் ஓடி போய் பதுங்கிக்கணுமா ? அவர் தொடங்குறாரு. இவர் தொடங்குறாரு அத பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. 40 வருஷமா நான் அரசியலில் இருக்கேன். இந்த தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ, துன்பத்தை அனுபவிச்சிட்டு இருக்காங்க….
எங்க அஜெண்டா இதான்… அதுதான். மீனவர்கள் ஒருத்தர் கூட தாக்கப்படக்கூடாது, சுதந்திரமாக செயல்படனும், மிகப்பெரிய தன்மானத்தோடு வாழனும், மாணவர்களுக்கு நீட்டை தூக்கணும், சிறைவாசிகளுக்கு விடுதலை செய்யணும், அப்புறம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் முழுக்க… இதை இந்தியா முழுக்க கொண்டு வரணும்…. எல்லா மாநிலத்துக்கும் இதுல பொறுப்பாளர்கள் இணைய இருக்கிறார்கள்….. இது ராணுவ வேகத்தில் இனிமேல் போகும்… இப்பதான் நான் பிள்ளையார் சுழி போட்டு அல்லாஹ் அக்பர்ன்னு ஆரம்பிச்சிருக்கேன் என தெரிவித்தார்.