
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளிலே மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவாதம் இந்த கூட்டத்திலே எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது ரோகிணி குழுவின் அறிக்கையின்படி ஓபிசி பிரிவினரின் உட்பிரிவுகளுக்கு எந்த மாதிரியான இட ஒதுக்கீடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விவாதம் என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதைத்தவிர இந்தியா என்கின்ற பெயரை பாரத் என மத்திய அரசு சமீபத்திலே தொடர்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறது. அது தொடர்பாகவும் ஏதேனும் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு இருக்குமா ? எனது கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அது குறித்த கேள்விகளையும் கேட்கின்றனர். இந்த கூட்டத்தொடரில் இப்படி பல்வேறு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.