
புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 இல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 20-ல் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை விடுத்துள்ளது.