கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது..

கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது சாத்விக் என்ற ஒன்றரை வயது குழந்தை மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதையடுத்து தகவலறிந்து தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று மாலை 6:30 மணியிலிருந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுட்டனர். சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிய நிலையில் 5 அடிக்கு மேல் பாறைகள் இருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை மீட்டனர்
பக்கவாட்டில் பள்ளம் தோண்டி குழந்தையை உயிருடன் மீட்டது மீட்பு படை..

குழந்தை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குடிநீருக்காக தாத்தா அமைத்த ஆழ்துளை கிணற்றில் அவரது பேரன் சாத்விக் தவறி விழுந்தது குறிப்பிடத்தக்கது.