அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.

அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம் மதிப்பீடு -13 ஆக இருக்கிறது. ஆனால் இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் அங்கு அதிக பிரபலமான ராஜ குடும்பத்தை சேர்ந்த நபராக இருக்கிறார்.

அவரின் அங்கீகார மதிப்பீடானது +26 ஆகவும், இளவரசர் வில்லியமின் அங்கீகாரமானது +21 ஆகவும் இருக்கிறது. அதே சமயத்தில், இளவரசர் ஹாரிக்கு அங்கீகாரம் -7 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.