சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டே வருகிறது. கயல் தொடரில் கயல் சந்திக்கும் பல இடர்பாடுகளையும், தனது குடும்பத்துக்காக அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறனையும், கயலுக்கும் ,எழிலுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏற்படும் தடைகளை கடப்பது குறித்தும் கடந்த சில மாதங்களாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் கயலுக்கும், எழிலுக்கும் திருமணமாகி முடிந்தால் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என மக்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் கயல் தொடரில் நடிகையாக நடித்து வரும் சயத்ரா ரெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். கயல், எழில் திருமணம் ஆனது போன்ற போட்டோவை பதிவு செய்து, கயல் தொடர் முடியப்போவதில்லை. இனிமேல் தான் கதையில் பல திருப்பங்கள் உள்ளன. நான் எங்கு சென்றாலும் என்னிடம் அனைவரும் கேட்கும் கேள்விக்கு பதில் இதுதான் என தனது இணைய பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.