
சித்தார்த் ஆனந்த் டைரக்டில் பல்வேறு வருடங்களுக்கு பின் ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகியது. பதான் படம் ரிலீஸிற்கு முன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் வெளியான பின் வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது.
இந்த படம் மொத்தமாக இதுவரையிலும் ரூபாய்.900 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஹிந்தியில் யஷ் நடித்த கேஜிஎப் படம் ரூ.435 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போது இப்பட சாதனையை முறியடித்து ரூபாய்.436 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது ஷாருக்கானின் பதான். கூடியவிரைவில் ரூ.1000 கோடி கலெக்ஷனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது,