
கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து பட குழு அது குறித்து வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் விவாத பொருளாக மாறியுள்ளது.
கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து படக்குழு அது குறித்து வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருவதோடு, அதை தற்போது கே ஜி எஃப் 3-க்கான ஹின்ட்டாக இருக்குமென யூகித்து அது குறித்த விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, படக்குழு வெளியிட்ட வீடியோ தொகுப்பின் இறுதியில் “சத்தியம் காப்பாற்றப்பட்டதா ?”என்ற கேள்விக்கான பதில், கே ஜி எஃப் 3-க்கான தொடக்கமாக இருப்பதாகவும், “MOTHER OF ALL COLLISIONS” என்ற வசனம் கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்-இன் அடுத்தப் படைப்பான சலார் படத்துடன் கே ஜி எஃப்3யை இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

MARVEL பாணியில் கேஜிஎப் THE END GAME வேண்டும் எனவும், பிரசாந்த் சினிமேட்டிக் யூனிவர்ஸ் (PCU) உருவாக வேண்டும் எனவும் தங்களது விருப்பத்தை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்கள் தெரிவித்து வர, கேஜிஎப்3 ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Mother Of All Collisions ?
If This Really Happens,
We Can Expect “KGF – The EndGame” After A DecadeIgnore tags:
#1ROCKYingYearOfKGF2#Yash #KGF2 #KGF3 #Salaar #ntr31 #ntr #PrabhasMaruthi pic.twitter.com/kG6s3rDWgi— Adheera (@adheeraeditz) April 14, 2023
ஏற்கனவே தமிழ் சினிமா திரையுலகில் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (LCU) உருவானதைத் தொடர்ந்து, தற்போது கன்னட சினிமாவில் பிரசாந்த் சினிமேட்டிக் யுனிவர்ஸ் உருவாகுமா என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.