
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , திருமதி குஷ்பூ சுந்தர் அவர்கள் உடனடியாக நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர்களுக்கு 24 மணி நேரம் நாங்கள் கெடு கொடுக்கிறோம். இப்பொழுது மணி 5 மணி ஆகிறது. நாளைக்கு 5 மணிக்குள்ளேயோ….
குஷ்பூ அவர்கள் தான் போட்ட பதிவிற்கு…….. பட்டியல் இன மக்கள் சமூகத்தை சார்ந்தவர்களை இழிவுபடுத்தியதற்காக பகிரங்கமாக நான் ”மன்னிப்பு கேட்கிறேன்” ”இதுபோன்ற செயல்களை” இனி செய்ய மாட்டேன் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி பகிரங்கமாக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்
அப்படி 24 மணி நேரத்தில் அவர்கள் மன்னிப்பு கேட்க தவறினால், என்னுடைய தலைமையில் குஷ்பு அவர்களின் வீடு முற்றுகையிடப்படும். முற்றுகையும் மீறி அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் அவர்கள் வீட்டைத் தாண்டி தமிழ்நாட்டில் எங்கும் ”நடமாட முடியாமல்” ஆக்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.