
தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகிகளுள் ஒருவராக வலம் வருபவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் உள்ளார். கடந்த 2014-ம் வருடம் இவர் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், அண்மையில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில் சின்மயி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதாவது, “சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழுவீச்சில் வந்திருக்கிறது. கட்டிடங்களில் அதனை தடுக்க நாம் என்ன செய்யலாம்?, எப்படி சமாளிப்பது. கைக் குழந்தைகளை கொசு மோசமாக கடித்து விடுகிறது. மேலும் குழந்தையை கொசு கடித்த புகைப்படத்தையும் இணைத்து உள்ளார். இவரின் இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
Kosu thollai is back full swing in Chennai it seems.
What can we do to keep it at bay at the individual building level?
How to deal with this and infants and newborns getting bitten ya!! pic.twitter.com/CqGaTfE3ic
— Chinmayi Sripaada (@Chinmayi) May 14, 2023