KPY புகழ் பாலா 3 வது இலவச ஆம்புலன்ஸை பழங்குடியின மக்களுக்கு வழங்கியுள்ளார்.

மிகச் சிறந்த காமெடியன் மற்றும் தனியார் தொலைக்காட்சியான  விஜய் டிவி புகழ் பெற்ற  KPY  பாலா பலருக்கும் பிடித்தமான ஒருவர். அவரது காமெடிக்கு மட்டுமல்லாமல் அவரது நற்குணத்திற்கும் பல ரசிகர்கள் தமிழ்நாட்டில் உண்டு. பொதுவாக சினிமா துறையில் பிரபலங்களாக இருக்கும் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் வாயிலாக தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை சொந்த வீடு, கார் உள்ளிட்டவற்றை வாங்கி அனுபவித்து மகிழ்ந்து கொள்வர். அதிலும் சிலர் பெரும்பான்மை  பணத்தை தனது சொந்த செலவிற்காகவும், சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை பொதுநலத்திற்காகவும் செலவிடுவர். ஆனால் பாலா இவர்களில் மிகவும் தனித்துவமானவர்.

தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் முழுக்க, முழுக்க பொதுநலத்திற்காக செலவிட்டு வரும் நற்குணம் கொண்டவர். பாலா முதலில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களு மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதை தொடர்ந்து மற்றொரு ஆம்புலன்ஸ்-ம் ஆதரவற்றோருக்கு வழங்கியதையடுத்து,  10 ஆம்புலன்ஸ்கள் இதுபோன்று ஆதரவற்றவர்களுக்காக வழங்க இருக்கிறேன் என வாக்குறுதியும் அளித்தார்.

இது பரவலாக பேசப்பட, இது சாத்தியமா ? என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த சோழகர் பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய அவர், இப்பகுதி மக்கள் சரியான சாலை வசதி கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வன  பகுதியில் வாழும் விலங்குகளால் அவ்வபோது தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே இவர்களை தேர்ந்தெடுத்து ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளேன். மீதமுள்ள ஆம்புலன்ஸ்கள் இதுபோன்று அத்தியாவசியமாக தேவைப்படும் மக்களிடையே தேடித்தேடி கொண்டு சேர்க்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய இச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.