
செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவர். வள்ளியூரில் கண்காடியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர் மீது அதே பள்ளி.. அதே வகுப்பில் பயிலக்கூடிய மாணவர்கள்… இந்த பள்ளி மாணவருடைய வீடு புகுந்து தாக்கியதில் சின்னதுரையும் , அவருடைய சகோதரி சந்திரசெல்வியும் பலத்த காயம்முற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தடுக்கச் சென்ற தாத்தா அதே இடத்திலே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவத்தை புதிய தமிழகம் கட்சியின் மூலமாக வன்மையாக கண்டிக்கிறேன். 16 முடிந்து 17 வயது நிரம்பி இருக்கக்கூடிய மாணவர்கள். மிகக் கொடிய ஆயுதத்தை பயன்படுத்தி சக பள்ளி மாணவர்களை…. மாணவரை கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்று சொன்னால் ? இதை எளிதாக பார்க்க கூடாது.
இது ஏதோ ஓரிடத்தில் நடந்து விட்ட சம்பவமாக கருதினால் அது தவறு. தமிழகத்தின் உடைய பல பகுதிகளில்… பல மாவட்டங்களில்… பள்ளிகளில் – கல்லூரிகளில் மாணவர்களுக்கிடையே இது போன்ற பலமுறை மோதல்கள் நடத்தப்படுவதெல்லாம் அதற்கு காரணமாக இருக்ககூடிய பல்வேறு நிகழ்வுகளை கடந்த பத்து வருடங்களாக நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.
2011 முதல் 16 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரங்களில் தென் தமிழகத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்த போது… இந்த சாதிய மோதல்கள் நடப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய மாணவர்கள் தங்களின் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக்கூடிய வகையில், நெற்றியிலே பொட்டு இட்டுக் கொள்வது கொள்வது, கையிலே கயிறு அணிவது, பட்டனில் அடையாளப்படுத்திக் கொள்வது, வாட்சியிலே அடையாளப்படுத்தி கொள்வது, பேனர் கட்டுவது …
அதேபோல அவர்களுக்கு பிடித்த சாதிய தலைவர்களின் பிறந்த நாளை பள்ளியில் – கல்லூரியில் கொண்டாடுவது, இதை அடிப்படையாக வைத்து மோதல்கள் எல்லாம் நிகழ்கின்றன. எனவே இதை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று அன்றே நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறோம். அதேபோல பள்ளி – கல்வித்துறை இயக்குனருக்கும் நேரடியாக மனு அளித்திருக்கின்றோம்.