வரும் ஜன,.26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா மாபெரும் அணி வகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்குரிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு துவங்கியுள்ளது. நிகழ்ச்சி மற்றும் டிக்கெட்டின் வகையை பொறுத்து டிக்கெட் விலையானது ரூ.20 முதல் ரூ.500 வரை மாறுபடும்.

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறுவதற்குரிய வழிமுறைகள்:

# முதலில் www.aamantran.mod.gov.in எனும் இணையதளத்துக்கு சென்று உங்களது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

# கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு நிகழ்வில் பங்கேற்கும் நபர்களின் தேவையான தனிப்பட்ட விபரங்களை நிரப்ப வேண்டும்.

# புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுகளை பதிவேற்ற வேண்டும்.

# அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்த பின் OTP-ஐ உள்ளிட வேண்டும்.

# அதன்பின் உங்களுக்கு விருப்பமான டிக்கெட்டை தேர்வு செய்ய வேண்டும்.

# ஆன்லைன்மூலம் பணம் செலுத்த வேண்டும்.

# பணம் செலுத்தும் செயல்முறையை தொடர வேண்டும். பின் ஒரு QR குறியீட்டைப் பெறுவீர்கள்.

# நடப்பு ஆண்டு குடியரசு தின அணி வகுப்பு நிகழ்வில் கியூஆர் குறியீட்டைக் காட்டவும்.

டிக்கெட் வாங்குவதற்குரிய பூத்கள், கவுன்டர்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்படும்

# சேனாபவன் (கேட் எண் 2)

# சாஸ்திரி பவன் (கேட் எண் 3)

# ஜந்தர் மந்தர் (பிரதான கேட் அருகே)

# பிரகதி மைதானம் (கேட் எண்-1)

# நாடாளுமன்றம் (வரவேற்பு அலுவலகம்)

# நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை.