சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அந்த வீடியோவில் சில குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென்று 1 குரங்கு மிக வேகமாக வந்து அங்கிருந்த ஒரு குழந்தையை பிடித்து இழுத்து செல்ல ஆரம்பித்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக குழந்தை மீதான குரங்கின் பிடி விலகுகிறது. இதற்கிடையில் குரங்கு குழந்தையை இழுத்து செல்லும்போதே, ஒரு நபர் தூரத்தில் இருந்து கத்திக் கொண்டே அவர்களை நோக்கி வருவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த நபர் அருகே வருவதை கண்டு குரங்கு சிறிது பயந்து குழந்தையை சாலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடுகிறது