சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களிடமே மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆண்களிடம் யாரும் கேள்வி கேட்பதில்லை என்று கூறினார். அதோடு வக்கிர புத்திக் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர் என்றும் தெரிவித்தார்.

இந்த வக்ரபுக்திக்காரர்கள் 2 வயது குழந்தையும் விடுவதில்லை, 80 வயது மூதாட்டியும் விடுவதில்லை என்று குஷ்பு வேதனை தெரிவித்தார். பெண்கள் தைரியமாக வெளிவந்து தங்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளை குறித்து புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பயப்படுவார்கள் என்றும் கூறினார்.