தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரசு பொது விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை. அதன் பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக பார்த்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த தொடர் விடுமுறை மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.