
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்… என்னவென்றால், இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்…. அந்த ஓட்டுகள் இல்லாமையே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம், அப்படின்னு நான் சொன்னதாக என் பெயரிலே வாட்ஸ் அப்பில் ஒரு போலீஸ் அதிகாரி…. மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரி….
ரிட்டையடு ஆன போலீஸ் அதிகாரி போட்டு இருக்காரு… அவர் மீது வழக்கு போட்டு இருக்கிறேன்… எதற்காக அது சொல்லுகிறேன் என்றால் ? இப்படி எல்லாம் திட்டமிட்டு….. இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக, சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல வகையில் இதை பயன்படுத்துவதை தான் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்களும் விரும்பி இந்த இயக்கத்திற்காக பணியாற்றியிருக்கிறார்கள். எனவே அவருடைய புகழ் வாழ்க, அவருடைய செல்வங்கள் சிறப்பு பெற்று, சிறப்போடு வாழ்க…. புரட்சி கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் செல்லக்கூடிய வீட்டிற்கு விளக்காய்…. நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள்,
வாழுங்கள் என்று வாழ்த்தி…..எல்லா திருமண விழாக்களும் சொல்வதில் போல, மணமக்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது….. உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆணாக இருந்தாலும்…. பெண்ணாக இருந்தாலும்…. அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன் என பேசி தனது வாழ்த்துரையை முடித்தார்.