
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற லாரி செந்தில் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.