சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லட்சுமி என்பவர் திடீரென சாலையை கடந்தார். அப்போது அவர் மீது மோதாமல் இருப்பதற்காக முருகேசன் பிரேக் பிடித்தார்.

அதே நேரம் பின்னால் வந்த சரக்கு வாகனம் லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி ராஜாவும், மதியழகனும் கீழே விழுந்தனர். அப்போது சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மதியழகன், லட்சுமி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.