பீகார் மாநிலத்தின் புர்ணியா மாவட்டத்தில் உள்ள காரி கோசி நதிக்கு இடையே, ஒரு தனியார் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் இது அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி அல்ல. நில மாஃபயாக்கள் தங்கள் பணத்தில் இதனை கட்ட முயற்சித்துள்ளார்கள். அவர்கள் நோக்கம், நதிக்கு அப்பாலுள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை பல மடங்கு விலைக்கு விற்க வேண்டுமாம்.

இந்த பாலம் பற்றி நகராட்சி துறைக்கு முற்றிலும் தகவல் இல்லாதது, மிகப் பெரிய கேள்வி எழுப்புகிறது. பாலம் கட்டப்படும் இடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் JCB உடன் சென்றபோது, உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். “இந்த பாலம் எங்களுக்குத் தேவை, பயனளிக்கிறது” எனக் கூறிய அவர்கள், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விரட்டியுள்ளனர்.

 

“இந்தப் பாலம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்கள், தாங்கள் தனிப்பட்ட முறையில் கட்டியதாகக் கூறுகிறார்கள். மேலதிக ஆணையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறியுள்ளார்.