
மணிப்பூரில் இரு இன மக்களிடையே கடந்த ஆண்டு முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அவர்கள் சமீபத்தில் இவர்கள் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களை சுட்டுக்கொன்று அவர்களது உடல்களை வீசினார்கள்.
இதனால் பல இடங்களில் வன்முறைகள் நீடித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குகி பழங்குடி இன மக்கள் சவப்பெட்டி ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவித்தது. அதாவது கடந்த 11ம் தேதி பாதுகாப்பு படையினர் கொன்ற 10 உடல்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடல்களை தணக்கம் செய்ய அவர்கள் சவப்பெட்டி ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இந்த ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருப்பு நிற சட்டை அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினர். அதன்படி ஆயிரக்கணக்காண இளைஞர்கள் திரண்டனர். தற்போது 218 சி ஏ பி எஃப் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, அதோடு மூத்தா அதிகாரிகள் பலர் அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளன. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த 50 படைப்பிரிவுகளைக் கொண்ட 5000 துணை ராணுவ வீரர்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.