
கென்யாவில் போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரையன் முவெண்டா என்பவர் தன்னை ஒரு திறமைமிக்க வழக்கறிஞராக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தவறாக சித்தரித்து, நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.
- இந்நிலையில், அவர் 26 சட்ட வழக்குகளை கையாண்டு, மாஜிஸ்திரேட்டுகள், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜராகி வெற்றியும் கண்டுள்ளார்.
- சமீபத்தில் அவர் கைது செய்யப்படும் வரை, அவரது வழக்கறிஞர் பட்டத்திற்கான உண்மை தன்மையையோ, அவரது போலியான வழக்கறிஞர் அடையாளத்தையே அதிகாரிகளால் கண்டறிய இயலவில்லை.
- கென்யாவின் லா சொசைட்டியின் நைரோபி கிளையின் ரேபிட் ஆக்ஷன் டீம்-க்கு பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில்,அதனடிப்படையில் அவரை அரசு கைது செய்தது.
- இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், லா சொசைட்டியின் போர்ட்டலை கிரிமினல் முறையில் அணுகி, வேறொரு வழக்கறிஞரின் கணக்கு விவரங்களைத் திருடி ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அதே பெயரில் பிரையன் முவெண்டா என்ட்விகா என்ற சட்டப்பூர்வமான வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்து அவர் தனது சொந்த புகைப்படத்தையும் பதிவேற்றினார்.
- இதையடுத்து உண்மையான வழக்கறிஞரான பிரையன் முவெண்டா என்ட்விகா, லா சொசைட்டி அமைப்பில் உள்நுழைய முடியாததால், சொசைட்டி செயலகத்தை அணுகினார், இது அவரது அடையாளம் திருடபட்டதை கண்டுபிடிக்க வழிவகுத்தது.
- சுருக்கமாக, போலியான பிரையன் முவெண்டா ஒரு வழக்கறிஞராகக் தன்னை நிலைநிறுத்தி காட்டி, பல வழக்குகளைக் கையாண்டு கைது செய்யப்படும் வரை, சட்ட அமைப்பை வெற்றிகரமாக ஏமாற்றினார். சொல்லப்போனால், தோல்வியை சந்திக்காத வழக்கறிஞராக இருந்துள்ளார்.
- இந்நிலையில் கென்யாவின் லா சொசைட்டி அவர் மோசடி நடவடிக்கைகள் எடுக்க கோரி தொடர்ந்த வழக்கில், தற்போது தீவீர விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.