
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது. மழை மிகவும் அதிகரித்தால், தனியார் நிறுவனங்களுக்கும் முழு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.