
உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக காணப்படுகிறது. இந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட நபர் தன்னை விடுமாறு கெஞ்சி கேட்கிறார். இருப்பினும் அவரை அவர்கள் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அதோடு அவரின் முகம் முழுவதும் ரத்தமாக இருந்த நிலையில் தரையில் தள்ளி தாக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு புகாரும் வராத நிலையில் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.