
UK ல் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 19-ல் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளிலும் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி, டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், UK வில் லியோ திரைப்படத்தின் முன்பதிவு வசூலானது, இதற்கு முன்பாக UK வில் வெளியான இந்திய திரைப்படங்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி அதிக வசூலை பெற்று முதல் நாள் கலெக்ஷனில் அதிக வசூல் பெற்ற இந்தியன் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தை இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் புதிய ரெகார்ட் ஒன்றை தளபதி விஜய் அவர்களின் படம் யுகே வில் உருவாக்கி உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.