
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் பல பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலையில், கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
We are safe nanba 😇
– Team #LEO pic.twitter.com/WAOeiP94uM
— Seven Screen Studio (@7screenstudio) March 21, 2023
இந்நிலையில் காஷ்மீரில் தற்போது லியோ பட குழு இருப்பதால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நிலநடுக்கத்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். அதோடு நடிகர் வடிவேலு சந்திரமுகி படத்தில் அரண்மனையில் தனியாக இருக்கும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பி உள்ளாராம். இது தொடர்பான வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/jai__02/status/1638110607496089601?s=20