லியோ ட்ரைலரில் குறிப்பிட்ட காட்சியின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. அதே போல,  அதிகமான பார்வையாளர்களை கடந்தும் சாதனை படைத்து வருகிறது.  இந்நிலையில் ட்ரெய்லர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதை மீண்டும் மீண்டும் பார்த்து படம் லோகேஷ் சினிமேட்டிக்  யுனிவர்ஸ் LCU-ற்குள் இருக்கிறதா ? என அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி, 

லியோ திரைப்படம் LCU  ல் இருப்பதற்கான எந்த ஒரு சான்றுகளும் இதுவரை ட்ரைலரில் கிடைத்திடாத பட்சத்தில் ஒரு சில காட்சிகளை வைத்து இது LCU க்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர். அந்த வகையில்,  படத்தில்  ஹரோல்ட் தாஸ் ஆக நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் கையில் விஜய் புகைப்படத்தை தூக்கி காட்டி ஏதோ வசனம் பேசுகிறார்.

அதை அங்கு உள்ளவர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதை பார்க்கையில்,  கைதி அன்பு  மற்றும் விக்ரம் ரோலக்ஸ் ஆகியோர் இவன் தலையை கொண்டு வரவனுக்கு லைஃப் டைம் செட்டில்மண்ட்றா  என்கிற வசனத்தை பேசும் தோனியில் தெரிவதாகவும்,  கைதி, விக்ரம் ஆகிய படங்களை தொடர்ந்து லியோ வில் இந்த வசனம் இடம் பெறுவது போல் தெரிவதால் கண்டிப்பாக LCU  விற்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.