
லியோ திரைப்படம் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்த விவரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
பொதுவாக கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாவது என்றாலே கண்டிப்பாக பிரச்சனையுடன் தான் வெளியாகும். இதுவரை வெளியான பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் அல்லது ரிலீஸ் தேதியில் பல விதமான பிரச்சினைகளை சந்தித்த பின்பு தான் ரிலீஸ் ஆனது. அதே போல் லியோ திரைப்படத்திற்கும் ஏராளமான பிரச்சனைகளை பட குழுவினர் சந்தித்து வந்தனர். அவை,
- நான் ரெடி தான் பாடலில் விஜய் அவர்கள் புகை பிடிப்பது போன்று இருப்பது பிரச்சினையானது,
- நான் ரெடி தான் பாடல் வரிகள் மிக மோசமாக இருப்பதாகவும் அதை நீக்க கோரியும் புகார்கள் கொடுக்கப்பட்டன,
- லியோ ட்ரெய்லரில் விஜய் அவர்கள் கெட்ட வார்த்தை பேசும் காட்சி மிகப் பெரிய சர்ச்சையானது. விஜயின் ஆதரவாளர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
- ரசிகர்களுக்கும் தளபதி விஜய் அவர்களுக்கும் மிகவும் பிடித்த மிகப்பெரிய கொண்டாட்டமான இசை வெளியீட்டு விழா ரத்தானது.
- ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடும் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இறுதியாக தளபதி விஜய் அவர்களின் முதல் IMAX திரைப்படமாக லியோ வெளியாக இருந்த நிலையில், அதற்கான ஃபார்மேட் சரியாக போய் சேராததால், பல பகுதிகளில் ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு அதுவும் தற்போது பிரச்சனைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி எனபதை போல, வேறு எந்த கதாநாயகர்களுக்கும் இல்லாத அளவிற்கு பல பிரச்சனைகளை சந்தித்தபடியே விஜய் அவர்களின் ஒவ்வொரு படங்களும் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. சர்க்கார் திரைப்படத்தில் விஜய் அவர்கள் கூறுவது போல, பிரச்சனைகள் வருவது வேதனையை தந்தாலும், சரியான பாதையில் பயணிப்பதால் தான் பிரச்சனை வருகிறது. எனவே அது பெருமைக்குரிய ஒன்றாக தான் இருக்கிறது என அவரது படத்தின் வசனத்தை கூறிய படி , ரசிகர்கள் இணையத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.