
லியோ திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு புதிய டைட்டில் கார்ட் ஒன்றை படக்குழு வடிவமைத்துள்ளது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களின் அறிமுக காட்சிகள் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ ? அதற்கு சமமாக படத்தின் டைட்டில் கார்டு முக்கியமானதாக கருதப்படும். அந்த வகையில், விஜய் அவர்களின் பெயர் டைட்டில் கார்டில் தளபதி விஜய் நடிக்கும் என்ற வார்த்தையை பார்த்ததும் ரசிகர்களின் ஆரவாரம் காதுகளை கிழிக்கும் வகையில் திரையரங்கில் இருக்கும். இந்நிலையில் தனக்கென ஒரு வித்தியாசமான டைட்டில் கார்டை மாஸ்டர் திரைப்படத்திலிருந்து தொடர்ச்சியாக விஜய் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்.
தளபதி என்ற சத்தத்துடன் விஜய் அவர்களின் பெயர் டைட்டில் கார்டாக வரும். அது ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இன்றளவும் அமைந்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் அவர்கள் நடித்த அனைத்து படத்திற்கும் அதே டைட்டில் கார்டையே பயன்படுத்தி வந்தார்.
தற்போது மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் -உடன் இணைந்த விஜய் அவர்களுக்கு வேறொரு புதிய டைட்டில் கார்டை லியோ பட குழு வடிவமைத்து உள்ளதாகவும், அதற்கென தாறுமாறான BGM ஒன்றை அனிருத் இசையமைத்துள்ளதாகவும் தியேட்டரில் படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக டைட்டில் கார்டு அமையும் எனவும் லியோ படத்தின் டயலாக் ரைட்டர் ரத்தினகுமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.