
லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா விழா இன்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் ஒரு மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.
விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் அந்த வகையில் இன்று நடைபெறக்கூடிய லியோ வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.
எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை மொத்தம் 5 கேட் வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அனுமதிக்க அவர்களுக்கு கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாஸ் எடுத்துட்டு வருபவர்களுக்கு, ரசிகர்கள் விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை, ஆதார் அட்டை என்ற மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு வெற்றி விழா தொடங்கியது.
அதில் தற்போது நடிகர் விஜய் பேசி வருகின்றார். முன்னதாக பேசிய நடிகர் அர்ஜுன் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார். அவருக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்த வகையில் அவருடைய ரசிகர்களால் விஜய் பேசிய வீடியோ வைரலாக்கப்பட்டு வருகின்றது.
அதில் பேசும் நடிகர் விஜய் வெளியில் இருந்து பார்க்கிறதுக்கு வேணும்ன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால் ஈஸி தான் என ரசிகர்களை நோக்கி கையை காட்டினார். இதற்க்கு நடிகர் விஜய் அரசியல் வெளியில் இருந்து பார்க்க க்ஷட்டம் மாதிரி இருக்கும். உங்களை நம்பி இறங்கினால் அது ஈஸி என பதிவு செய்து விஜய் அரசியலை குறிப்பிட்டு தான் பேசினார் என விஜய் பேசிய வீடியோவை வைரலாகி வருகின்றார்கள்.
https://twitter.com/KanthaleMohit/status/1719743106231537982