
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அபிஷேக் பச்சன். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் பொன்னியின் செல்வன் 2 படம் மிகவும் அழகாக இருக்கிறது. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மணிரத்தினம், விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி மற்றும் கார்த்தி என சக்தி வாய்ந்த கருப்பொருளை வழங்கிய மற்ற நடிகர்களுக்கும் பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய மனைவியின் நடிப்பை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
இது உங்களுடைய பெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவை பார்த்து ரசிகர் ஒருவர் நீங்கள் ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து நடிக்க அனுமதியுங்கள். ஆராத்யாவை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு நடிகர் அபிஷேக் பச்சன் அவர் ஒரு படம் செய்யட்டும். குறிப்பாக அவருக்கு பிடித்த ஒன்றை செய்வதற்கு நான் அனுமதிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் மனைவியின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறீர்கள் என்று கூறி அபிஷேக் பச்சனை பாராட்டி வருகிறார்கள்.
#PS2 is simply FANTASTIC!!!
At a loss for words right now. So overwhelmed. Well done to the entire team #ManiRatnam @chiyaan @trishtrashers @actor_jayamravi @Karthi_Offl and the rest of the cast and crew. And so, so proud of the Mrs. Her best by far. #AishwaryaRaiBachchan— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) April 29, 2023