
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை, ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டு ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார். ஆனால் இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் தொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ballistic ஏவுகணையை பயன்படுத்தியதற்காக புதினை, இங்கிலாந்து அரசு கண்டித்தது. அந்த ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்க போவதாக ரஷ்ய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார். அதேநேரம் போர் நிறுத்தம் குறித்து டிரம்புடன் விவாதிக்க தயார் என்றும் கூறியுள்ளார். முன்னதாக உக்ரைன் முதன் முறையாக அமெரிக்க, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.