மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த திங்கள் கிழமை அன்று மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு உயிரிழந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உயிரிழந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளைத் துணியில் இறந்த குரங்கை போர்த்தி, மனித இறுதி ஊர்வலம் போன்று பூக்களை தூவி சென்றனர். அதோடு DJ பக்தி பாடல்களை இசைத்தும், அதற்கு கிராம மக்கள் நடனமாடியும் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு பண்டிகை சூழ்நிலை உருவானது‌.

அதன் பின் குரங்கின் உடல் தனக்கம் செய்யப்பட்டது. இதயடுத்து அந்த குரங்கின் ஆத்மா சாந்தி அடைய கிராம மக்கள் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று விலங்குகளுக்கு இறுதி சடங்குகள் செய்யும் நடைமுறை இப்பகுதிக்கு புதிதல்ல என்றாலும், DJ இசை மற்றும் நடனத்துடன் இது போன்ற விழா நடத்துவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.